×

ராமேஸ்வரத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து; ஓட்டுநர் இல்லாமல் ஓடியதால் பரபரப்பு!

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து, ஓட்டுநர் இல்லாமல் திடீரென ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ராமேஸ்வரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து நேற்று மதியம் மதுரை செல்வதற்காக அரசு பேருந்து பணிமனையை விட்டு வெளியே வந்தது.

அப்போது பேருந்தின் ஓட்டுநர் பணிமனைக்கு எதிரே உள்ள மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையோரம் பேருந்தை நிறுத்தி விட்டு தண்ணீர் குடிப்பதற்காக கீழே இறங்கியுள்ளார். அப்போது திடீரென சாலையில் ஓடிய பேருந்து, அந்தப் பகுதியில் இருந்த வீட்டின் மதில் சுவர் மேல் மோதி நின்றது.

இதில், வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்தை மீட்டனர். இந்த விபத்தின்போது பேருந்தில் யாரும் இல்லாததாலும், அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாததாலும் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

 

The post ராமேஸ்வரத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து; ஓட்டுநர் இல்லாமல் ஓடியதால் பரபரப்பு! appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Ramanathapuram ,Rameswaram Government Transport Corporation ,Rameswaram Central Bus Station ,
× RELATED மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கோடை மழை: உழவு பணியை துவக்க அறிவுறுத்தல்